தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 31, 2021, 1:05 PM IST

நண்பர்களுடன் வனப்பகுதிக்குள் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

வனப்பகுதிக்குள் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர், சந்தேகமான முறையில் உயிரிழந்து கிடந்ததால், அவருடைய நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கல்வராயன்மலையில் 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 6 நாட்டுத் துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சசிகலா செல்போன் அழைப்பால் உற்சாகமான தொண்டர்!

தஞ்சாவூர்: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்த அதிமுக தொண்டரை, தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

கரோனா தொற்று தாக்கம்: தாய்மார்கள் தப்பிக்க என்ன வழி?

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் கரோனா தொற்றிலிருந்து தப்பிக்கு வழி குறித்து முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். க.குழந்தைசாமி கூறுவதை காணலாம்.

தமிழ்நாட்டில் இனி எல்லாமே டோர் டெலிவரி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.31) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளைப் போன்று, மளிகைப் பொருள்களும் வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரிசை: கூடுதல் தகனமேடை ஏற்படுத்த கோரிக்கை!

ராமநாதபுரம்: கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட நீண்ட வரிசையில் வைத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை., துணைவேந்தர் பதவி: விண்ணப்பிக்க அவகாசம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என, தேடுதல் குழு அறிவித்துள்ளது.

பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி: உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

திருவள்ளூர்: பாழடைந்த 60 அடி கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருவனந்தபுரம்: லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெறக்கோரி, கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இந்தியாவில் சரிவைச் சந்தித்துவரும் கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details