தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2021, 1:07 PM IST

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

நடிகர் ரஜினிகாந்த் கரோனா நிதி வழங்கினார்

கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதி வழங்கினார்

நாரதா ஊழல் வழக்கு: திரிணாமுல் காங்., 2 அமைச்சர்கள் உள்பட நால்வர் கைது!

கொல்கத்தா: நாரதா வெளியிட்ட அமைச்சர்கள் ஊழல் தொடர்பான காணொலி வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர், மாநில அமைச்சர்கள் இருவர் என நான்கு பேரை விசாரணைக்காக சிபிஐ அலுவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

நேற்று(மே.16) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களை தடுக்கும் திறன் கோவாக்சினுக்கு இருப்பதாக பாரத் பயோடேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதவியேற்ற சில நாள்களில் கரோனாவால் உயிரிழந்த தலைமை நீதிபதி!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி நீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துளசி வாண்டையார் காலமானார்

சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான கே.துளசி வாண்டையார் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

துளசி வாண்டையார் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சுதந்திர போராட்ட வீரர் துளசி வாண்டையார் மறைவிற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கல்வி வள்ளல் கே. துளசி வாண்டையார் மறைவு வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

கல்வி வள்ளல் கே.துளசி வாண்டையாரின் மறைவு வருத்தமளிப்பதாக அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார்.

கரோனா பரவல்: புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் தரிசனம் ரத்து!

புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details