தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : May 12, 2021, 1:09 PM IST

முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இச்சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(மே12) உயிரிழந்தார்.

கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

சென்னை: கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

’சார்பட்டா பரம்பரை’ நடிகர் கரோனாவால் உயிரிழப்பு!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் துணை நடிகர் மாறன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சபாநாயகர்: பதவியேற்றார் அப்பாவு!

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்றார்.

பழத்தில் நாட்டு வெடிகுண்டு: மனித நேயமற்ற செயலால் உயிருக்கு போராடிவரும் எருமைமாடு

விருதுநகர்: ராஜபாளையத்தில் வேட்டையாட வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை உண்ட எருமைமாடு வெடி வெடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு: கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்: காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை பெற கோயம்புத்தூரில் 19 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து வெடித்த கேஸ் சிலிண்டர்கள்: தீயணைப்பு வீரர் உள்பட மூவர் காயம்!

சென்னை: குரோம்பேட்டை அருகே குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மூன்று கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மீண்டும் ரோஜா கண்காட்சி ரத்து: மக்கள் இல்லாமல் பொலிவிழந்த பூக்கள்!

நீலகிரி: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடக்கவிருந்த பிரசித்தி பெற்ற 17ஆவது ரோஜா கண்காட்சி கரோனா ஊரடங்கால் 2ஆவது ஆண்டாக ரத்தாகியுள்ளது. அங்கு பூத்துள்ள லட்சக்கணக்கான ரோஜாக்கள் பார்வையாளர்களின்றி பொலிவிழந்து காணப்படுகின்றன.

மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்: செயலிழக்கச் செய்த நிபுணர்கள்!

நாகப்பட்டினம்: செருதூர் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details