’ஊழல் அரங்கேறினால் இந்தியன் தாத்தாவாக மாறுவேன்’ - கமல்
நாகை: ”திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஊழல் அரங்கேறினால் இந்தியன் தாத்தாவாக மாறுவேன்” என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
’கழுதையுடனா கூட்டணி வைப்பது...’ - தேமுதிக-அமமுக கூட்டணியைத் தாக்கும் புகழேந்தி
மதுரை: ”கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, ஒரு புலியுடனோ சிங்கத்துடனோ கூட்டணி வைத்தால் பரவாயில்லை ஆனால் ஒரு கழுதையுடன் கூட்டணி வைத்திருப்பது வேதனையளிக்கிறது” என அமமுக - தேமுதிக கூட்டணி குறித்து அதிமுக செய்திதொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் 75 வேட்பாளர்கள் போட்டி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
’’முதலமைச்சர் மாவட்டம்’ என்ற பெயர் நீடிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’ - ஓமலூர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி
”சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசிடமிருந்து விருது வாங்கியிருக்கும் அதிமுக அரசு, முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் கோரப்பசியுடன் இருப்பதால், தில்லு முல்லு செய்து ஆட்சிக்கு வரப் பார்க்கிறார்கள்” - முதலமைச்சர் பழனிசாமி
’பதவி சுகம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்றார்’ - ஆ.ராசா தாக்கு
நீலகிரி: உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக முதலமைச்சர் பழனிசாமியை ஒப்பிடுகிறார்கள். அதற்குத் தகுதி இல்லாதவர் முதலமைச்சர் பழனிசாமி. அவர் பெரும் தலைவராக சித்தரிக்கப்படுகிறார்” என விமர்சித்தார்.