தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ..

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Mar 19, 2021, 1:01 PM IST

இங்கெல்லாம் டிரைவ் பண்ண ஆசைப்படாதீங்க!

உலகில் எங்கு வேண்டுமானாலும் கார், பைக் ஓட்டுங்க. ஆனால் இங்கெல்லாம் வேண்டாம். சர்வதேச அளவில் மோசமான சாலை வசதிகள் கொண்ட நாடுகளை பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் இருவர், விவசாயிகளின் போராட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியனில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 19) நிறைவு பெறுகிறது.

கேரளத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- பொதுக்கூட்டத்தை மாலை நடத்த அரசியல் கட்சிகள் திட்டம்!

கேரள சட்டப்பேரவையை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் ஆளும் இடதுசாரிகளும், கடந்த கால தோல்வியில் இருந்து மீள காங்கிரஸும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இதற்கிடையில் கடவுளின் தேசத்தில் வெப்பம் அதிகரித்துவருகிறது. இதனால் பொதுக்கூட்டங்களை மாலையில் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

‘NEET க்கு பதில் SEET’ - மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

சென்னை: ’தலைநிமிரப் போகும் தலைமுறைகளுக்கான விதை’ என்று குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கல்வி அமைச்சரை எதிர்கொள்ள நடிகையை நிறுத்திய பாஜக!

மேற்கு வங்க கல்வி அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பார்த்தா சட்டர்ஜியை எதிர்த்து பாஜக நடிகை ஸ்ரபந்தி சட்டர்ஜியை களமிறக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் அறிகுறிகளை காணவில்லை- ஓமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் அறிகுறிகளை காணவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கூறினார்.

புதுச்சேரியில் பள்ளிகளை மூட சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

புதுச்சேரி: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடக்கோரி சுகாதாரத் துறை ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளது.

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!

பழனியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது கடும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'வெனம் 2' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 'வெனம் 2' படத்தின் புதிய வெளியிட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details