தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Dec 19, 2020, 1:01 PM IST

எடப்பாடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

இந்தியா-வியட்நாம் பிரதமர்களிடையே டிச. 21இல் பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா-வியட்நாம் இடையே எதிர்கால வளர்ச்சி குறித்து விவாதிக்க வருகிற 21ஆம் தேதி இருநாட்டு பிரதமர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மின் துறை ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவு!

சென்னை: புதுச்சேரியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் துறை ஊழியர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கோடா லொக்கா பெற்றோரின் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க முயற்சி!

கோவை: இறந்த அங்கோடா லொக்காவின் பெற்றோரது ரத்த மாதிரிகளைச் சேகரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

க. அன்பழகன் பிறந்தநாள்: திமுகவினர் மரியாதை

திருச்சி: க. அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வங்கத்தில் அமித்ஷா! பாஜகவில் இணையும் திரிணாமூல் காங். தலைவர்கள்!

கொல்கத்தா: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகி பலர் பாஜகவில் இணையவுள்ளனர்.

பிரதமரின் அலட்சியத்தால் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பு - ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமரின் அலட்சியத்தால் இந்தியாவில் ஒரு கோடி கரோனா பாதிப்பும், 1.5 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

'பாஜிராவ் மஸ்தானி'யின் ஐந்தாண்டுகள்: படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இந்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்த 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படம் வெளியாகி ஐந்தாண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் படக்குழுவினருக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பகலிரவு டெஸ்ட்: மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 39 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது.

அமெரிக்காவில் மேலும் ஒரு கரோனா தடுப்பூசிக்கு அரசு அனுமதி

வாஷிங்டன்: மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி அவசரப் பயன்பாட்டிற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details