தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - etv bharat top ten news nine pm

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

By

Published : Jun 3, 2021, 9:12 PM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிதி அறிவிப்பு!

சென்னை: திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை!

சென்னை: கரோனா காலத்தில் களப்பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவலர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ பூண்டி கலைவாணன்

திருவாரூர்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

திடீர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமனம்!

மதுரை: திடீர் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது என மதுரையில் தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

260 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கிய எம்பி, எம்எல்ஏக்கள்

சென்னை: சென்னையில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து இதுவரை 260 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளனர்

ராமநாதபுரத்தில் 95% காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி

ராமநாதபுரம்: மாவட்டத்தில் 95 விழுக்காடு காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம்: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது.

பொது இடத்தில் ஆபாச வார்த்தை: காவலரை இடமாற்றம் செய்து எஸ்.பி உத்தரவு

திருநெல்வேலி: பொது இடத்தில் தம்பதியினரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய காவலரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

'டெட்' தேர்ச்சி சான்றிதழ் இனி ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சிப் பெற்ற சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details