தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 9 PM - top ten news

ஈடிவி பாரத்தின் மாலை 9 மணி செய்திச் சுருக்கம்...

etv-bharat-top-ten-news-nine-pm
etv-bharat-top-ten-news-nine-pm

By

Published : Apr 29, 2021, 9:03 PM IST

'கரோனாவைக் கட்டுப்படுத்த ராணுவம் அனைத்து வகையிலும் உதவும்' எம்.எம். நரவனே!

நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் வழங்கும் என, ராணுவத் தளபதி எம்.எம். நரவனே பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார்.

மீண்டும் பறக்கிறது மம்தா கொடி: மேற்கு வங்க எக்ஸிட் போல் முடிவுகள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்று திருமணம் செய்யவிருந்தவர் கரோனாவால் உயிரிழப்பு

சிக்கமகளூரு: இன்று திருமணம் செய்யவிருந்த ஒரு இளைஞர் கரோனாவால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவிற்கு மீண்டும் ஒரு எம்எல்ஏவை பறிகொடுத்த உ.பி. அரசு!

கரோனாவால் பாதிக்கப்பட்ட நவாப்கஞ்ச் பாஜக எம்எல்ஏ கேசர் சிங் கங்வார் இன்று(ஏப்.29) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பெண்: ஆக்ஸிஜன் அளித்து உதவிய இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, இந்திய ராணுவம் ஆக்ஸிஜன் வழங்கி உதவியுள்ளது.

முடிந்ததை முயற்சியுங்கள் மோடி, அமித்ஷா - சித்தார்த்

தனது மொபைல் நம்பரை தமிழ்நாடு பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக சித்தார்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பின்வாசல் வழியாக நகை விற்பனை: 5000 ரூபாய் அபராதம் கட்டிய உரிமையாளர்

சென்னை: கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய நகைக்கடைக்கு நகராட்சி அலுவலர்கள் 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

கரோனா விதிகளை பின்பற்றாத ஆறு கடைகளுக்கு சீல்!

திருப்பத்தூர்: கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட் உட்பட ஆறு கடைகளுக்கு வருவாய் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

IPL 2021 KKR vs DC: டாஸ் வென்ற டிசி; கேகேஆர் பேட்டிங்

கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

IPL 2021 RR VS MI: மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது.

ABOUT THE AUTHOR

...view details