தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 9 மணி செய்திகள் Top 10 news @9pm - etv bharat top ten news

ஈடிவி பாரத் 9 மணி செய்திகள்...

etv-bharat-top-ten-news-nine-pm
etv-bharat-top-ten-news-nine-pm

By

Published : Apr 24, 2021, 8:59 PM IST

கரோனா பரவல் - தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 26 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

'இரண்டு லட்சத்து 9 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு சிவன் உருவம்' பட்டதாரி இளைஞர் அசத்தல்!

கோயம்புத்தூர்: இரண்டு லட்சத்து 9 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு சிவன் உருவம் வரைந்து பட்டதாரி இளைஞர் சிவன் அருள் செல்வன் அசத்தியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி

சென்னை: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வேட்பாளர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி, ஆர்டி-பிசிஆர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனச் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பெண்களைத் தாக்கும் இளைஞர் - குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பரிந்துரை!

காஞ்சிபுரம்: பெண்களை கண்மூடித்தனமாக அடிக்கும் இளைஞர் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்பு உடையதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்பு

திண்டுக்கல்: புதுப்பட்டியில் 17 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை: மொழிபெயர்ப்பில் தமிழுக்கு இடமில்லை!

புதிய தேசிய கல்விக்கொள்கை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு - காவல்துறையினர் விசாரணை!

புதுச்சேரி: ரெயின்போ நகரில் தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகையைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அம்மா உணவகத்தில் கூடுதலாக உணவு தயாரிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!

சென்னை: நாளை முழு ஊரடங்கு என்பதால் சில உணவகங்கள் மட்டுமே திறந்து இருக்கும், அதனால் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்தை வழக்கம் போல் இயக்கவும் கூடுதலாக உணவு தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

IPL 2021 RR vs KKR: டாஸ் வென்ற சாம்சன்; ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details