தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9 PM - etv bharat top ten news nine pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

By

Published : Feb 20, 2021, 9:26 PM IST

ஊழல் குறித்து பேச திமுகவிற்கு தகுதியில்லை - பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துவரும் திமுகவிற்கு ஊழல் குறித்து பேசுவதற்கு தகுதியில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாமக சார்பில் விருப்பமனு பெறுவதற்கான தேதி அறிவிப்பு

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 23ஆம் தேதி முதல் மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது' உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்படும் அனைத்து விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டுமென்ற கோரிக்கையை, தற்போதுள்ள நிலையில் பரிசீலிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளைப் பேயோட்ட அழைத்து சென்ற தந்தையால் ஏற்பட்ட விபரீதம்'

ராமநாதபுரம்: டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அவரது தாயாரின் பேய் பிடித்திருப்பதாகக் கூறி பூசாரிகளிடம் அழைத்துச் சென்ற நிலையில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கடைசி நேரத்தில் கிரண் பேடி பிறப்பித்த ஆணையால் சர்ச்சை

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வடமாநில ஊழியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்து முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மின்கசிவால் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழப்பு!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

அதிகரிக்கும் யானை-மனித மோதல்கள்! காரணம் என்ன?

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் யானை தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20ல் மட்டும் இதில் 58 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணம் யானைகளா? மனிதர்களா? அரசா?

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது: அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

சேலம் : நாளை நடைபெறவுள்ள பாஜக மாநில மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details