தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2021, 9:22 PM IST

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

சாலையில் கொட்டிய ஜல்லிக் கற்கள் - அகற்றிய காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களை மதுரை போக்குவரத்து காவல்துறையினர் அகற்றினர். அவர்களின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு!

ஒன்றரை வயது மகளைக் கொன்ற தந்தைக்கு கர்நாடக மாநில கடக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை நீதிபதி ராஜசேகர் வி பட்டீல் வழங்கினார்.

சிலிண்டருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ரதசப்தமி உற்சவம்!

சூரியனின் பிறந்த நாளான இன்று (பிப்.19) ரதசப்தமி உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமேஸ்வரத்திற்கு வருகை!

ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைக்காக இன்று (பிப்.19) ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சி சங்கரமடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

‘பிரசாந்த் கிஷோர் பில்லிற்கு பணம் கட்ட முடியாமல் திமுக திணறுகிறது’ - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: திமுகவில் தற்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பிரசாந்த் கிஷோர் அளிக்கும் பில்லிற்கு பணம் கட்ட முடியாமல் திமுகவினர் திணறி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சாலையில் சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு!

சென்னை: பல்லாவரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நான்கு சவரன் செயினை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ரேசனில் வழங்கப்படும் அரிசி தரமில்லை; ஜோதிமணி எம்பியிடம் பொதுமக்கள் வேதனை

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக கரூர் மக்களவை உறுப்பினரிடம் சாம்பட்டி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆதி?

சென்னை: முதல் முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுக்கு கரோனா நெகட்டிவ்!

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு கரோனா தொற்று பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details