மோடி இருந்தும் அசரவில்லை - சொல்லவந்ததை சொல்லி அரங்கை அதிரவைத்த மம்தா!
கொல்கத்தாவில் மாநில அரசு சார்பில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், முதலமைச்சர் வருகையின்போது, பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட்டனர். இதனால் சில நொடிகள் மட்டும் பேசிவிட்டு, இனி பேச இயலாது என்று கூறி இருக்கைக்குச் சென்றார்.
கரோனா போரில் அண்டை நாடுகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா:உலக சுகாதார அமைப்பு பாராட்டு
ஜெனீவா: பூடான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கியதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அலுவலர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இமாச்சல பிரதேச மாநில பொன் விழா: அமித் ஷா, ஜே.பி நட்டா கலந்துகொள்கின்றனர்!
ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் இமாச்சல பிரதேச மாநில 50ஆம் ஆண்டு பொன் விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி
புதுக்கோட்டை: இலங்கையில் கொல்லப்பட்ட மீனவர்களின் உடல்கள் இன்று கோட்டைப்பட்டினம் வந்தடைந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் மீனவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.