233 கிலோ கஞ்சா பதுக்கல் - 2 பேர் கைது; 4 பேர் தலைமறைவு!
சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட இரண்டு நபர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள 4 பேரைக் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரியில் விளையும் பச்சை ஆப்பிள்: ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் கர்ப்பிணிகள்!
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பார்க் அருகேயுள்ள தோட்டக்கலைத்துறை பண்ணையில் பிளம்ஸ், பேரி, பீச், விக்கி, நாவல், பெர்சிமென், ஆரஞ்ச், பச்சை ஆப்பிள் உள்ளிட்ட நீலகிரிக்குரிய பழங்கள் விளைகின்றன. தற்போது ஊட்டி ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளது. இங்கு விளையும் ஆப்பிள், பச்சை நிறத்தில் இனிப்பு அதிகளவில் இல்லாமல் புளிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். கர்ப்பிணிகள் இவற்றை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதன் சீசன் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இம்முறை மே மாதத்திலேயே இந்தப் பச்சை ஆப்பிள் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் காய்க்கத் தொடங்கியுள்ளது.
காய் கனிகள் வாங்க... இந்த எண்ணுக்கு அழையுங்கள்!
தளர்வில்லா ஊரடங்கில், நடமாடும் வண்டியில் வரும் காய்கறிகளை பெற, ஊராட்சிகள் வாரியாக பிரத்தியேக தொடர்பு எண்களை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
நேருக்கு நேர் மோதிய கார்கள் - ஷாக்கிங் சிசிடிவி காட்சிகள்!
ஹைதராபாத்: தெலங்கானா கச்சிபவுலியில் சாலையில் சென்ற கார் மீது, எதிர்த்திசையில் வந்த மற்றொரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிய பெண்ணுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாத்தலமாகும் கனவுடன் பாங்குரா ஹோய் தேரிக்காடு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் உள்ள தங்கிதங்கா கிராமம், அறியப்படாத ஓர் சிறந்த சுற்றுலா தளமாகும். இங்குள்ள தங்க மணல் குன்றுகள், அவைகளுக்கிடையில் ஓடும் வெள்ளி நிற ஜாய்போண்டா நதி, குறுங்காடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய எழில் சூழ்ந்த, இக்கிராமத்தை அரசு, சுற்றுலா தளமாக அறிவித்து, பிரபலபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. அதுகுறித்த சிறப்புத் தொகுப்பை இங்கு காணலாம்.