தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 செய்திச் சுருக்கம்...

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 23, 2021, 9:28 AM IST

ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம்... கனவு கோட்டைக்குள் நுழைந்த ஹைதராபாத் மாணவி!

ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மென்பொருள் முதுகலைப் பட்டத்தை முடித்த தெலங்கானா மாணவி தீப்திக்கு, மைக்ரோசாஃப்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

முழு ஊரடங்கு: ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

சென்னை: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை (மே.24) முதல் அமலாக உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

தென்மாவட்டங்களுக்கு மட்டும் 380 அரசு பேருந்துகள்- போக்குவரத்து துறை செயலாளர்!

தமிழ்நாடு முழுவதும் மே 23, இரவு 11.45 மணி வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு மட்டும் 380 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சொந்த ஊர் செல்ல அனுமதி: போதிய பேருந்துகள் இல்லை பொது மக்கள் அவதி!

தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைபிடிக்க இருப்பதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் வெளிமாவட்டங்களுக்கு செல்ல பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வெளியூர் செல்வதற்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிகின்றனர். அங்கு போதிய அளவில் பேருந்துகள் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா சிகிச்சை மையமாக மாறிய தனியார் கல்லூரி!

ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

துர்நாற்றத்தில் தத்தளிக்கும் கங்கை!

லக்னோ: கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்த நிலையில், தற்போது கரையோரம் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரயாகராஜின் நைனி பகுதியில் சடலங்கள் புதைப்பால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும், புனித நிதியான கங்கையில் குளிப்பதையே விட்டுவிட்டோம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

பசுமை வீரர்களுடன் நட்பு கொள்வோம்: ஆக்ஸிஜன், நிழல் தரும் தாவரங்களை உற்பத்தி செய்யும் நர்சரி

பெருந்தொற்றின் காரணமாக முச்சு திணறி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். ஆக்ஸிஜனின் முக்கிய ஆதாரம் தாவரங்கள் தான் எனவும், கரோனா தொற்றுக்குப் பின்னர் ஆக்ஸிஜனையும் அவற்றை வழங்கும் தாவரங்களுக்கான முக்கியத்துவம் குறித்தும் மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரின் சென்ட்ரல் நர்சரியில், கடந்த ஆண்டு முதல் 20 ஆயிரத்துக்கும் மேல், அதிக ஆக்ஸிஜனையும், நிழலையும் தரும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்துள்ளனர். அதுகுறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

'இந்தியாவில் தடுப்பூசி வீணாவது குறைந்துள்ளது'- மத்திய சுகாதாரத்துறை

மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வீணாவது குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை: 18-44 வயதினருக்கு இனி தடுப்பூசி இல்லை!

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தலைநகர் டெல்லியில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

புதிய சிபிஐ தலைவரை வரும் திங்களன்று தேர்வு செய்யும் பிரதமர்

சிபிஐ அமைப்புக்கான புதிய தலைவரை பிரதமர் மோடி தலைமையிலான குழு வரும் திங்கள் கிழமை (மே.24) தேர்வு செய்யவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details