தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News @ 9 AM - etv bharat top ten news nine am

ஈடிவி பாரத்தின் காலை 9 செய்திச் சுருக்கம்..

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 14, 2021, 9:16 AM IST

'இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

இன்று(மே.14) காலை முதல் கோவிட் சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் விற்பனை செய்யப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'இனி தவறியும் தவறிழைக்காதீர்கள்' இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு எம்.பி. சு.வெங்கடேசன் அறிவுறுத்தல்!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெற்றிருந்த ஆதியோகி சிலையை நீக்கிவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மாற்றப்பட்டதுக்கு சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.

'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் இலவசம்' - ஆட்டோக்காரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை: கரோனா காலத்தில் தன்னார்வலர்களாக செயல்படும் மதுரை ஆட்டோ ஓட்டுநர்களைப் பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிறையில் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக தந்தை மனு: வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள்!

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் தனது மகன் கொலை செய்யப்பட்டார் எனக் கூறி, தந்தை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

'பொதுமக்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போடவேண்டும்'- தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ

தர்மபுரி: பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'மருத்துவமனையில் தேவையான அளவு ஆக்ஸிஜன் உள்ளது' காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார்!

தென்காசி மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்ஸிஜன், தடுப்பு மருந்துகள் உள்ளதாக, சட்டப்பேரவை உறுப்பினர் பழனி நாடார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

திருவள்ளூரில் கோவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

காலி ஆக்ஸிஜன் டேங்கர்களுடன் ஒடிசா புறப்பட்ட ரயில்!

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம், ரூர்கேலாவுக்கு மூன்று காலி கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்களுடன் ரயில் புறப்பட்டது.

'கரோனா கட்டளை மையத்திற்கு இதுவரை 14 ஆயிரம் அழைப்புகள்'

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைகளில் படுக்கை வசதியை ஏற்படுத்தவும், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் தேவை எனவும், இதுவரை 14 ஆயிரம் அழைப்புகள் கரோனா கட்டளை மையத்திற்கு வந்துள்ளன.

"டேப் முக்கியமல்ல; உயிர்தான் முக்கியம்" கரோனா நிவாரண நிதி வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவன்!

ஆன்லைன் வகுப்பிற்காகப் டேப் வாங்க சிறுக, சிறுக சேர்த்த ரூ.10,135 பணத்தை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் வழங்கி, உதவிக்கரம் நீட்டிய மூன்றாம் வகுப்பு சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

ABOUT THE AUTHOR

...view details