தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news
etv bharat top ten news

By

Published : Dec 17, 2020, 9:02 AM IST

அழுகுரல் சத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன்: நெகிழவைத்த மதுரை காவல் துறை!

மதுரை: சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்குப் பொன்னியின் செல்வன் எனப் பெயர் சூட்டி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில் 2,000 மினி கிளினிக்குகள் திறப்பு - முதலமைச்சர்

சேலம்: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 10 நாள்களில் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நோடல் அலுவலரை நியமிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

பெருநகர சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் நலனைக் கண்காணிக்க நோடல் அலுவலரை நியமிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'5 ஆண்டுகளாகியும் வராத எய்ம்ஸ்... முதலமைச்சரின் அடுத்த கபட நாடகம் தயாராகிறதா' - மு.க. ஸ்டாலின்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அம்பலமாகியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

சென்னை: மதுரவாயல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்

சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தண்ணீர்ப் பற்றாக்குறை: வேதனையில் குறவர் சமூகம்!

செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் அருகேவுள்ள சிறுக்கரணை கிராமத்தில் வாழும் குறவர் சமூக குடியிருப்புப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையா: விளக்கம் அளிக்கும் லதா ரஜினிகாந்த்

சென்னை: ஆஷ்ரம் பள்ளி வளாகத்துக்கான வாடகை முறையாகச் செலுத்தப்பட்டுவருகிறது என லதா ரஜினிகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க குழு அமைப்பு

திருமலை திருப்பதி அஞ்சனாத்ரி மலைகளில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆய்வுசெய்து நிரூபிக்க அர்ச்சகர்கள் அடங்கிய குழு ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அமைத்துள்ளது.

கல்லூரி கட்டணம் செலுத்தவந்த பெண்ணை வன்புணர்வு செய்தவர் கைது

கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக வேறு மாநிலத்திலிருந்து பெங்களூரு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details