தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணிச் செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 5 PM - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : Jul 12, 2021, 5:01 PM IST

நேரடியாக மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் தனிப்பிரிவில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகப் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

மேகேதாட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மேகேதாட்டு பிரச்சினை குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் மனத்தில் விஷமத்தனமான விதையைத் தூவாதீர்கள் - கே.பி. முனுசாமி

கொங்கு நாடு எனத் தமிழ்நாட்டைப் பிரிக்கும் நோக்கில், விஷமத்தனமான விதையை மக்கள் மனத்தில் தூவாதீர்கள் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை இப்படித்தான் இருக்கும்!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'மேகேதாட்டு... கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும்'

மேகேதாட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ள கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பழனியில் கேரள பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு: எஸ்பி விசாரணை

கேரள பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வுசெய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா இன்று (ஜூலை 12) சிலரிடம் நேரில் விசாரணை நடத்திவருகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் மேகத் திரள் வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை: வாகனங்கள், வீடுகள் பலத்த சேதம்!

சுற்றுலாத் தலமான இமாச்சலப் பிரதேசத்தின் தர்ம சாலாவில், அதிக அளவு மழை கொட்டித் தீர்த்த நிலையில், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

தமிழ்நாடு, வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'சீர்மிகு சட்டப்பள்ளியில் பயின்றவர்களுக்கும் உதவித்தொகை' - உயர் நீதிமன்றம்

அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகையை, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’நேபாளத்திற்குப் புதிய பிரதமர்’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு

நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியுபா என்பவரை நாட்டின் புதிய பிரதமராக நியமிக்க நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details