தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : Jun 14, 2021, 5:11 PM IST

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு!

எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடிநாயக்கனூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர் செல்வம் தேர்வாகியுள்ளார்.

ஒன்றிய அரசின் அனுமதி பெற்று அமெரிக்கா பறக்கும் ரஜினி?

அண்மையில் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற நிலையில், தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சாராய பாட்டில்தான் எஞ்சாமி' - சூடமேற்றி எஞ்சாயி செய்த திமுக தொண்டர்

டாஸ்மாக் கடை முன்பு திமுக தொண்டர் ஒருவர் சாராய பாட்டிலுக்கு சூடம் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தார்.

நாளையுடன் மின் கட்டண கால அவகாசம் முடிவு!

தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (ஜூன்.17) முடிவடைகிறது.

"நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு"

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதில் பாதிப்பு உள்ளது என்பதே குழு உறுப்பினர்களின் கருத்தாக உள்ளதாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் தெரிவித்தார்.

அரிய பறவையை காக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பழங்குடியின சமூகம்!

அருணாச்சலப்பிரதேசத்தில் அரிய பறவையான லியோசிச்லா புகனை பாதுகாக்க புகன் பழங்குடியின மக்கள் எடுத்த நடவடிக்கையால், தற்போது அந்தவகைப் பறவைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.

நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக்கவசங்கள் அறிமுகம்!

நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக் கவசங்களை புனேவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.சாதாரண என்-95, மூன்று அடுக்குகள் மற்றும் துணி முகக்கவசங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த செலவிலான இந்த முகக் கவசங்கள், கோவிட்- 19 தொற்றின் பரவலைத் தடுப்பதில் ஆற்றல் வாய்ந்ததாகவுள்ளன.

பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: கரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தெரு விலங்குகளின் பாதுகாப்பிற்கு திட்டம் வகுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!

கரோனா ஊரடங்கால் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details