தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : May 4, 2021, 7:32 PM IST

தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் முக்கிய ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்பு விழா குறித்து தலைமைச் செயலர், ஆளுநர் செயலர் முக்கிய ஆலோசனையில் நடத்தினர்.

கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கான முக்கிய காரணம் - மநீம துணைத் தலைவர் பொன்ராஜ்!

சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான் தோல்விக்கான முக்கிய காரணம் என மக்கள் நீதி மய்யதின் துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, கெளரவ செயலாளர்கள், துணைத்தலைவர்கள் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தெலங்கானாவில் 8 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானா நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: மருத்துவர் உட்பட 2 பேர் கைது

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மருத்துவர் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய கமல்!

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயிலில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!

சென்னை: மே 6 ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது,

அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுக: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை: மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுகவினரைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திமுக தொண்டர்கள் தவறு செய்தால் கட்சி காப்பாற்றாது: மா.சுப்ரமணியன்

சென்னை: திமுக தொண்டர்கள் தவறு செய்தால் கட்சி காப்பாற்றாது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெற்றியை பறித்த பள்ளப்பட்டி வாக்குகள்

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தோல்வியை தழுவியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை.

ABOUT THE AUTHOR

...view details