தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm

By

Published : Apr 26, 2021, 5:08 PM IST

அரசுப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்குக

கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அரசுப் பணியில் உள்ள பணியாளர்கள் சுழற்சி முறையில் 50 சதவீதம் பணிக்கு வரும் முறையை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலகச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வெங்கடேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிடுவோம் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக தெரியவந்தால், மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிப்பதுடன், அதை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்க உத்தரவிடுவோம்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் என்ன?

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பயன்படுத்த, தமிழ்நாடடிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.

தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை - சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: தமிழ்நாட்டின் தற்போதைய கரோனா பரவல் நிலைக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைதான் காரணம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

'ஸ்டெர்லைட் திறப்புக்கு தற்காலிக அனுமதி வேண்டும்' - கனிமொழி

தமிழ்நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் தற்காலிகமாக அனுமதி வழங்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 20 பேர் கைது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை

ஈரோடு: கரோனா பரவல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், இன்று முதல் (ஏப். 26) பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வீடு தேடி வரும் கரோனா பரிசோதனை வாகனம் அறிமுகம்!

ஈரோடு மாநகர் பகுதியில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தைக் கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கிவைத்தார்.

ஊரடங்கு: நிவாரணத் தொகை வழங்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை: கரோனா ஊரடங்கு கால நிவாரணத் தொகை வழங்கக் கோரி மரக்கால் ஆட்டக்கலைக் கலைஞர்கள் மரக்கால் ஆட்டம் நிகழ்த்தியவாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாட்டு மக்கள் அனைவருக்கு இலவச தடுப்பூசி - ராகுல் காந்தி கோரிக்கை!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details