தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

By

Published : May 30, 2021, 11:43 AM IST

ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்!

தூத்துக்குடி: சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் இன்று(மே.30) முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.

பழங்குடியினப் பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

ஒட்டாவா: கனடா நாட்டின் கம்லூப்ஸில் உள்ள மூடப்பட்ட பழங்குடியினப் பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'உள்ளம் நிறைந்த கலைஞரை, இல்லத்திலே கொண்டாடுவோம்'

சென்னை: ஜூன் 3ஆம் தேதி, நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை இல்லத்திலே கொண்டாட வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம்!

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

’கரோனா பாதிப்பு விவரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி குறைத்துக் கூறுகிறார் ’ முன்னாள் அமைச்சர் செம்மலை!

சேலம்: முதலமைச்சரிடம் நற்பெயர் வாங்குவதற்காகக் கரோனா பாதிப்பு விவரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி குறைத்துக் கூறுகிறார் என, முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

'மான் கி பாத்' நிகழ்வில் பிரதமர் உரை!

'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.

ஒரே நாளில் என்ஐடி பணியாளர்கள் 240 பேருக்கு தடுப்பூசி

திருச்சி: தேசியத் தொழில்நுட்பக் கழகப் பணியாளர்கள் 240 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆம்புலன்ஸ் திறப்பு விவகாரம்: ஈடிவி பாரத் நிருபர் மீது வழக்குப்பதிவு!

பாட்னா: ஒரே ஆம்புலன்ஸை திரும்ப திரும்ப பொது மக்கள் பயன்பாட்டுக்காக, அமைச்சர் தொடங்கி வைப்பதாகச் செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத் செய்தியாளர் மீது பாஜக தலைவர் பரசுராம் சதுர்வேதி அளித்த புகாரின் பேரில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்: தொலைபேசி மூலம் தகவல்கள் அறியும் மாநகராட்சி!

சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தொலைபேசி மூலம் உடல்நிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details