தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 19, 2021, 11:09 AM IST

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம் இதோ.....

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

குறைந்தபட்ச பிஎஃப் பென்ஷனை 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்-நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

டெல்லி: தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்புநிதி பென்ஷனை 3,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகளை மூட சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

புதுச்சேரி: கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடக்கோரி சுகாதாரத் துறை ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளது.

பெண் எஸ்பி பாலியல் புகார் - சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்

சென்னை: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபியை பணியிடை செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

‘நான் விவசாயிதான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்’ - எடப்பாடி பழனிசாமி

கடலூர்: ”நான் விவசாயி தான், ஸ்டாலினுக்கு தொழில் இல்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி முனையில் செல்போன் பறிக்க முயற்சி: வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

சென்னை: கைத்துப்பாக்கி வைத்து மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை, பொதுமக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.

உதயநிதி களமிறங்கும் தொகுதியில் அதிமுகவினர் பணபட்டுவாடா: வீடியோ வைரல்

சென்னை: திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் தங்கு தடையில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’பணத்தால் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்’ - டிடிவி தினகரன் சாடல்

தமிழ்நாடு மாநிலம் இன்றைக்கு ஏழு லட்சம் கோடிக்கு மேல் கடனில் இருக்கும் நிலையில் அதனை அடைக்கத் தள்ளாடி வருகிறோம். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் பணம் போடுவோம் என ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறார்கள் என, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது டிடிவி தினகரன் பேசினார்.

கமலை கலாய்த்த வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வானதி சீனிவாசன், "கமல் திடீரென வாக்கிங் போறாரு, ஜாக்கிங் போறாரு, அப்புறம் பாத்தா ஆட்டோவில் போறாரு, கம்பு சுத்துறாரு" என்று அவரைக் கிண்டல்செய்தார்.

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியனில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 19) நிறைவு பெறுகிறது.

’ஜமைக்காவுக்கு கோவிட் தடுப்பூசி கொடுத்ததற்கு நன்றி’ - கிறிஸ் கெயில்!

டெல்லி: ஜமைக்கா நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details