தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 11am - etv bharat top ten news eleven am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 11am

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

By

Published : Mar 13, 2021, 11:03 AM IST

மாணவர்கள் கண்டறிந்த சிந்து சமவெளி நாகரீகக் குறியீடுகள்!

உத்தரகோசமங்கை அருகே சிந்து சமவெளி குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன்

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

'அரசின் புதிய அறிவிப்புகள் திமுக வெற்றியை பாதிக்காது' - வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஈஸ்வரன்!

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெருந்துறை, சூலூர், திருச்செங்கோடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முதலமைச்சரின் புதிய அறிவிப்புகளால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறினார்.

வீரப்ப மொய்லிக்கு சாகித்ய அகாடமி விருது

இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் 20 மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு நேற்று (மார்ச் 12) அறிவிக்கப்பட்டன. கன்னட மொழியில் சாகித்ய அகாடமி விருது வீரப்ப மொய்லிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை குறைவாகக் காட்டுகின்றனரா பறக்கும் படையினர்?

திருவள்ளூர்: தமிழ்நாடு எல்லையான திருத்தணியில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் முன்பே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை வாங்கி மறைத்து எடுத்துச் செல்லும் சம்பவம் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

'அரசின் புதிய அறிவிப்புகள் திமுக வெற்றியை பாதிக்காது' - வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஈஸ்வரன்!

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெருந்துறை, சூலூர், திருச்செங்கோடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முதலமைச்சரின் புதிய அறிவிப்புகளால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனக் கூறினார்.

குப்பையை சாலையில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் நகராட்சி ஊழியர்கள் தருமபுரம் சாலை சுடுகாடு செல்லும் பாதையில் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

'50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' - நாங்குநேரி, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் உறுதி

திருநெல்வேலி: நாங்குநேரி, பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.

வங்க தேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்!

வங்க தேசத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி பதிவு செய்துள்ளது. தொடரில் 4 புள்ளிகள் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அடுத்து இங்கிலாந்துடன் மோதுகிறது.

நிதித் திரட்டும் நிகழ்வுக்கு ஆதரவு தெரித்த பிரியங்கா சோப்ரா

மும்பை: ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 'பிட்டு' குறும்படக்குழுவினருடன் நடிகை பிரியங்கா சோப்ரா வீடியோ கால் மூலம் உரையாடினார்.

ABOUT THE AUTHOR

...view details