தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 11am - etv bharat top ten news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 11am

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

By

Published : Mar 12, 2021, 11:09 AM IST

முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த பறக்கும் படை - ராதாகிருஷ்ணன்

சென்னை: கரோனா தொற்று விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பவர்களை கண்காணிக்க கரோனா தடுப்பு பறக்கும் படை விரைவில் அமைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்- சீமான்

வேலூர்: பசித்து உணவு உண்கின்ற ஒவ்வொருவரும் நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் சாப்பிடாமல் பட்டினி இருங்கள் என தேர்தல் பரப்புரையில் சீமான் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாமக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும், பாட்டாளி மக்கள் கட்சி 3ஆம் கட்ட மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட தொகுதிகள்!

சென்னை: அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 12) வெளியிடப்படுகிறது.

டூப் ஸ்டாலின் காலில் விழுந்து குறைகளை கூறிய மூதாட்டி!

நாமக்கல்: ராசிபுரம் பகுதியில் 'ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போராரு' என்ற திமுகவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் டூப் ஸ்டாலின் காலில் விழுந்து மூதாட்டி குறைகளை கூறினார்.

பேருந்து பயணிகளிடம் ஆசைக் காட்டி பணத்தை சுவாகா செய்து வந்த இருபெண்கள் கைது!

கூட்டம் நிறைந்த பேருந்துகளில் ரூ. 10, 20 நோட்டுகளை கீழே போட்டு கவனத்தை திசை திருப்பி பிளேடால் நகை, பணம் கொள்ளையடித்து வந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.

'ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?' - ஆம்பூரில் சீமான் காட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்பதை தவிர வேறு எந்தத் தகுதியும் உள்ளதா? என ஆம்பூரில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.

புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டி!

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில செயலாளர் வேலு அறிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை: வல்சராஜ்

புதுச்சேரி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வல்சராஜ் தெரிவித்துள்ளார்.

இது காதலுமல்ல, நட்புமல்ல... எல்லையற்ற பேரன்பு - 5 Years Of Kadhalum Kadanthu Pogum

ஒரு சிலரிடம் வாழ்க்கையில் எந்தவிதமான உறவு முறையும் இருக்காது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒருவித அன்பை, புரிந்துகொள்ளுதலை ஏதோ ஒரு உறவு முறையில் அடைத்துவிட இந்தச் சமூகம் நிச்சயம் நினைக்கும். அதுபோல் இல்லாமல் ஒரு ஆண்-பெண்ணுக்குள் இருக்கும் அன்பை, அன்பாக மட்டுமே எடுத்துச் சென்ற படங்களில் 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details