தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 11 AM - etv bharat top ten news eleven am

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்..

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

By

Published : Jan 22, 2021, 11:26 AM IST

நண்பன் தாயின் நகையை திருடிய இளைஞர்: 40 சவரன் நகை பறிமுதல்!

புதுச்சேரி: நண்பரின் தாயாருடைய 40 சவரன் நகையை திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா வெடி விபத்து, பிரதமர், முதலமைச்சர் இரங்கல்!

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சசிகலா தவிர்த்த அமமுகவை அதிமுக உடன் இணைக்க தூது விடும் துக்ளக்

அதிமுக- அமமுக கட்சிகள் இணைத்து சந்தித்தால் எளிதாக வெற்றி பெறலாம் எனவும், பாஜக தலையீட்டால் மட்டுமே அணிகள் இணைப்பு சாத்தியம் எனவும், இரண்டு தரப்பும் வறட்டு கௌரவம் பார்க்காமல் இணைந்தால் மட்டுமே இரண்டு தரப்பிற்கு சேதாரம் இல்லாமல் வெற்றி பெற முடியும் என துக்ளக் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.

கம்பீரமாகக் காட்சியளிக்கும் வைகை அணைக்கு வயது 63!

தேனி: மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் வைகை அணை கட்டப்பட்டு இன்றுடன் 63 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

கடும் பனிமூட்டம், பெங்களூருக்குத் திரும்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

சென்னை: கடும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வந்த இரண்டு விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கைது செய்த நபரிடமே கைவரிசை காட்டியப் பெண் காவல் ஆய்வாளர்!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட நபரின் பணம், நகையைத் திருடிய புகாரில் சிக்கிய பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

குடியிருப்பு பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறை அலட்சியம் காட்டுவதாக புகார்!

கோவை: மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்குள்ள வீட்டின் வளர்ப்பு பிராணிகளை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் விவகாரத்தை மனிதநேயத்துடன் அணுகுவது அவசியம் - மத்திய அரசு

டெல்லி: மீனவர்கள் தொடர்பான விவகாரத்தை மனிதநேயத்துடன் அணுகுவதற்கான அவசியம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறை அலட்சியம் காட்டுவதாக புகார்!

கோவை: மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்குள்ள வீட்டின் வளர்ப்பு பிராணிகளை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பணியிடத்தில் முக கவசம் கட்டாயம், மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை - அரசு முதன்மைச் செயலாளர்

தலைமைச்செயலக வளாகத்திற்குள் வரும் ஊழியர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்

ABOUT THE AUTHOR

...view details