தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - TOP TEN NEWS

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Oct 4, 2021, 9:50 PM IST

1. ஷாருக்கான் மகனுக்கு அக். 7 வரை காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட ஷாருக்கான் மகன் உள்பட மூவரை வரும் அக்டோபர் 7ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

2. மனிதர்களை வேட்டையாடிய புலி - கிராம மக்களின் மனநிலை என்ன?

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி அடுத்த குரும்பர்பாடி கிராமத்தைச் சேர்ந்த மங்கள பசுவன் என்பரை, ஆட்கொல்லி புலி வேட்டையாடி கொன்றது. இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்தினர், ஊர் மக்கள் ஆகியோரின் மனநிலை குறித்து இந்த காணொலியில் காணலாம்.

3. போலி நியமன ஆணை: பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள்

பள்ளிக் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கிய மோசடி கும்பல் குறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

4. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை அவமதித்ததாக கே.எஸ். அழகிரி மீது புகார்

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல் ரவி சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

5. இழப்பீடு கேட்டுச்சென்ற விவசாயிகளை கலெக்டர் மிரட்டினாரா? - எதிர்ப்பைக் கிளப்பிய விவசாயிகள்

புகார் அளிக்க வந்த விவசாயிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

6. தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் - மாநிலத் தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க வட்டார அளவிலான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

7. பண்டோரா பேப்பர்ஸ் - விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பண்டோரா பேப்பர்ஸ் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

8. "கொலை ராஜ்ஜியம்" நடத்தும் உத்தரப் பிரதேச அரசு - மம்தா சாடல்

லக்கிம்பூர் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு உத்தரப் பிரதேச அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

9. புதுச்சேரியில் நடிகை நக்மா கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்தை கண்டித்து, மகிளா காங்கிரஸ் தலைவி நக்மா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

10. ’பூக்குழந்தை நானே...’ வகேஷன் போட்டோ பகிர்ந்த ’குட்டி மயிலு’ ஜான்வி!

நடிகை ஜான்வி கபூரின் புகைப்படத் தொகுப்பு இதோ...

ABOUT THE AUTHOR

...view details