தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 PM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 25, 2021, 9:11 PM IST

1. சுகேஷ் சந்திரசேகர் கோடிகளை சம்பாதித்து குவித்ததின் பின்னணி என்ன?

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சுகேஷ் சந்திரசேகர் கோடிகளை சம்பாதித்து குவித்ததின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

2. இணையத்தைக் கலக்கும் 'பொன்னியின் செல்வன் வடிவேலு மீம்ஸ்'

இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வம்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு வைகைப்புயல் வடிவேலுவைப் பொருத்தி சமூக வலைதளங்களில் வெளியான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

3. ENG vs IND: இங்கிலாந்தின் வேகத்தில் சரிந்தது இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களில் ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளது. இதையடுத்து, களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடிவருகிறது.

4. தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,573 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் குழு - உணவு வழங்கல் துறை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், கண்காணிப்பு ஆகியவற்றுக்காக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. சேலம், நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையில் ரூ. 503 கோடி முறைகேடு

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கூட்டுறவுத்துறையில் ரூ. 503 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. ஆசிரியர்களைப் பாராட்டி பேசிய காவலருக்கு பாராட்டுச் சான்றிதழ்!

மயிலாடுதுறை அருகே ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பேசிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

8. பொன்னியின் செல்வனில் இருந்து விடைபெற்ற ஜெயம் ரவி!

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் காட்சிகளும் நிறைவடைந்தன. மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் வரை மத்திய பிரதேசத்தில் நடைபெறுகிறது.

9. விஜய் சேதுபதியின் 'லாபம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

10. WTC POINTS TABLE: முதல் இடத்தில் விராட் & கோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 தொடரின் புள்ளிப்பட்டியலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details