தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP TEN NEWS

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தினைக் காணலாம்.

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Oct 21, 2021, 7:25 AM IST

1. இன்று உங்கள் ராசிக்கு? - அக்டோபர் 21

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

2. அக்டோபர் 21 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

3. அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்காதது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னையில் கடந்த சில நாள்களாக அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்கப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் நிலமை குறித்து சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

4. அம்மா உணவகத்தை மூட நினைத்தால்... திமுக அரசுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா உணவகத்தை திமுக அரசு மூட நினைத்தால், அதிமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

5. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்த ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

6. மனித உரிமை என்ற பெயரில் போலி அமைப்புகள் தொடங்கினால் நடவடிக்கை - சைலேந்திர பாபு

மனித உரிமைகள் என்ற பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

7. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டிய 1892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் பொருத்தியதாக ஆயிரத்து 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

8. 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சுமார் 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

9. டாக்டருக்கு கிடைத்த வெற்றி - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டாக்டர் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

10. சரித்திரம் காணாத சங்கக்கவி சஞ்சனா

நடிகை சஞ்சனா நடராஜன் அசரவைக்கும் புகைப்படங்களின் தொகுப்பு, இதோ...

ABOUT THE AUTHOR

...view details