தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்திச் சுருக்கம்....

etv bharat
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 25, 2021, 4:24 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனிஷ் கௌசிக் தோல்வி

இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கௌசிக் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இங்கிலாந்து வீரரிடம் போராடி தோல்வியடைந்தார்.

QR கோடால் கோலோச்சும் அரசுப் பள்ளி ஆசிரியர்

மாணவர்களுக்கு QR கோடு மூலம், அலைபேசி செயலியில் வீட்டுப்பாடங்களை நிறைவு செய்ய வழிவகை செய்த கரூரை சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு, 2018ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ராமதாஸ் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தனி நபர் பிரிவு: பிரணதி நாயக் தோல்வி

ஜிம்னாஸ்டிக்கின் தனி நபர் பிரிவின் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறும் போட்டியில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் தோல்வி அடைந்தார்.

பீடி தாத்தாவுக்கு துரோகம் செய்த ரஞ்சித் - சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்!

சார்பட்டா பரம்பரை படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மீனவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டதாக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

TNPL 2021: டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச முடிவு

மதுரை, திருச்சி அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிறப்பாக பணியாற்றிய வன அலுவலர்கள்... நினைவு பரிசும், சான்றிதழ்களும்

ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்த யானையை எரித்து அரசு வழிகாட்டுதலின்படி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசும், சான்றிதழ்களும் நேற்று (ஜூலை 24) வழங்கப்பட்டன.

போனில் பேசியதற்காக பெண்களுக்கு அடி - குஜராத்தில் நடந்த கொடூரம்

குஜராத்தில் மொபைல் போனில் பேசியதற்காக இரண்டு பெண்களை கடுமையாக தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாலிக்கை பார்த்த விக்ரம் டீம்

விக்ரம் படப்பிடிப்பு இடைவேளையில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பகத் பாசில் நடித்த மாலிக் படத்தை பார்த்துள்ளனர்.

ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிரடி ஆஃபர்: அள்ளித்தரும் இணைய வர்த்தக நிறுவனங்கள்!

இணைய வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் ஆகியன, ஆடி மாதத்தில் அதிரடி சலுகைகளை வழங்கும் நிகழ்வுகளை தொடங்கியுள்ளது. தற்போது அதற்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனமும் ஜூலை 26, 27 ஆகிய தினங்களில் சலுகைகளை அள்ளி கொடுத்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details