தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - etv bharat top ten news 5 pm

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

etv bharat top ten news 5 pm
etv bharat top ten news 5 pm

By

Published : Jun 7, 2021, 5:28 PM IST

பயமா? எனக்கா? தனியாளாக சடலங்களை தகனம் செய்யும் இஸ்லாமிய பெண்!

மின்மயானத்தில் தன்னந்தனியாக நின்று சடலங்களை தகனம் செய்கிறார் 29 வயது இஸ்லாமியப் பெண் சுபினா.

'குன்னூரில் தடுப்பூசி மையம் திறக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்' - மா.சுப்பிரமணியன்

குன்னூரில் உள்ள தடுப்பூசி மையம் திறப்பது குறித்து ஒன்றிய அரசை வலியுறுத்த உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வு - காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!

சென்னை: பொது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

முகக்கவசம் அணியாத அமுமுக பிரமுகர்: வெளுத்து கட்டிய காவலர்கள்!

முகக்கவசம் அணியாமல் சென்ற அமமுக பிரமுகரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் உரிமம் ரத்து- தமிழ்நாடு அரசு

கரோனா தொற்று சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தக் கூடாது- காவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆணோ, பெண்ணோ மாயமானார்கள் என்ற விசாரணையின்போது அவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனத் தெரிந்தால் எவ்விதத் துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் வழக்கை முடித்துவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக் கவசம் இல்லாமல் வெளியே சுற்றியவர்களுக்கு கரோனா பரிசோதனை!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றியவர்களை பிடித்த சுகாதாரத் துறையினர், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

’கோயில் நிலங்கள் குறித்த விசாரணைக்கு தனி தீர்ப்பாயம்’ - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் சிலைகள் மாயம், நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணையை தடையின்றி நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தக் கூடாது- காவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆணோ, பெண்ணோ மாயமானார்கள் என்ற விசாரணையின்போது அவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனத் தெரிந்தால் எவ்விதத் துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் வழக்கை முடித்துவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details