தமிழ்நாடு

tamil nadu

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

By

Published : Jan 16, 2021, 5:14 PM IST

Published : Jan 16, 2021, 5:14 PM IST

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

1 ஏரோ இந்தியா 2021: இணையத்தில் நுழைவு டிக்கெட்!

பெங்களூரு: கரோனா பரவல் காரணமாக ஏரோ இந்தியா 2021 கண்காட்சி நுழைவுக்கான டிக்கெட் விற்பனை தற்போது ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

2 'மருத்துவர்கள், விஞ்ஞானிகளை நம்புகள்; வதந்திகளை நம்ப வேண்டாம்'- பிரதமர்

நாடு முழுவதும் இன்று(ஜன.16) கரோனா தடுப்பூசி போடும் பணியை, நரேந்திர பிரதமர் மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

3 ஐந்தே நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை - துரித செயல்பாடுகளில் சீன அரசு!

சீனாவில் பரவிவரும் கோவிட்-19 தொற்றினைக் கட்டுப்படுத்த அரசு, ஹெபெய் மாநிலத்தில் ஐந்தே நாட்களில் ஒரு பிரமாண்ட மருத்துவமனையை கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது.

4 பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்சேதுபதி

பிறந்த நாளை முன்னிட்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் சர்ச்சையானதையடுத்து, நடிகர் விஜய்சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

5 தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

மதுரை: கரோனா தொற்றில் இருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

6 இறைச்சி கடைகளில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை

சேலம்: இறைச்சி கடைகளில் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

7 கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது- அப்போலோ குழுமத் தலைவர்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது என அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

8 காணும் பொங்கல்! - திறக்கப்பட்ட வேடந்தாங்கல்!

செங்கல்பட்டு: அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

9 வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார் ஓபிஎஸ்!

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை உயர்ந்ததையடுத்து உசிலம்பட்டி, நிலக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட பாசன நிலங்களுக்காக 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

10 தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: கன்னியாகுமரி கடல், தெற்கு இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details