தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - 11 am news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 AM
11 AM

By

Published : Oct 21, 2020, 10:57 AM IST

1.தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2.5 கோடி கொள்ளை

சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

2. TET தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும்...!

இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுதுவம் செல்லும் என தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

3. விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

சென்னை: வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்த 11வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4. உலக புள்ளியியல் தின விழா: நூல்களை வெளியிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: நிலையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் உள்ளிட்ட நூல்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டார்.

5.நீட் பயிற்சியை தொடங்கும் தமிழ்நாடு அரசு - அடுத்த ஆண்டு செய்ய வேண்டியது என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வரும் நீட் பயிற்சியினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும், சவால்கள் எதிர்கொள்வது குறித்தும் காணலாம்.

6.ஆத்தாடி! சரக்கு வாங்க வந்தா கரோனா டெஸ்டா... தெறித்து ஓடிய மதுப்பிரியர்கள்

புதுச்சேரி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுபானக் கடைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மதுபிரியர்கள் தெறித்து ஓடினர்.

7. காவலர் வீரவணக்க நாள்: நினைவிடத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை!

சென்னை: காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

8. லாரி மோதி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர் உயிரிழப்பு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே சாலையோரத்தில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளைஞர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9.திருச்சி என்ஐடி மாணவர்களை பாராட்டிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

திருச்சி: தேசிய தொழில் நுட்ப கழகத்தின் வேதிப்பொறியியல் துறையின் பொன்விழா கட்டடத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

10. கல்வராயன் மலைப் பகுதியில் 7,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 7,500 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் அழித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details