தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1மணி செய்திச் சுருக்கம் இதோ..

1 மணி செய்தி
1 மணி செய்தி

By

Published : Oct 21, 2020, 12:53 PM IST

  1. வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

2. அயர்லாந்திலிருந்து பார்த்த மூன்றாம் கண்: மதுரவாயலில் மாட்டிக்கொண்ட 'சைக்கோ முரளி'

போரூர்: மதுரவாயலில் பூட்டியிருந்த வீட்டிற்குள் திருட்டில் ஈடுபட்ட திருடனை அயர்லாந்திலிருந்து கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து, திருடனை பிடிக்க காவல்துறையினருக்கு வீட்டின் உரிமையாளரின் மகன் உதவியுள்ளார்.

3. மழையில் உற்சாகமாக நடனமாடிய கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பரப்புரையின்போது ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் நடமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

4. முதலமைச்சர் வருகைக்காக தயாராகும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை: மாவட்டத்திற்கு நாளை (அக்.22) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர இருப்பதையடுத்து, அவரை வரவேற்க ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துவருகிறது.

5.காவலர் நினைவு தினம்: ஸ்டாலின் வீரவணக்கம்!

காவலர் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் காவல் துறையில் வீரமரணமடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

6.வெங்காயம் பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - செல்லூர் ராஜூ

சென்னை: வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

7.வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

8. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

9. ஆந்திராவில் தொடர் மழை: அம்மம்பள்ளி அணையிலிருந்து நீர் திறப்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு-ஆந்திர எல்லையான திருத்தணி அருகே, ஆந்திராவிலிருந்து நேற்றிரவு 11 மணிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.

10. ஐபிஎல் சூதாட்டம்: பெங்களூருவில் ஒருவர் கைது!

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நகர குற்றப் பிரிவு காவலர்கள் பெங்களூருவில் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details