தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

செய்தி
செய்தி

By

Published : Nov 9, 2020, 3:15 PM IST

1.பைடனையும் மோடியையும் ஒப்பிட்டு விமர்சித்த ப.சிதம்பரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமெரிக்காவில் அநீதிக்கான காலம் முடிவடைந்ததாக வெற்றி களிப்புடன் உரையாற்றிவரும் நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

2.அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் - கமல்ஹாசன்

சென்னை : அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

3. பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி - எல்.முருகன் மீது விசாரணை!

சென்னை: தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜகவை சேர்ந்த எல்.முருகன், வானதி சீனிவாசன், இல.கணேசன் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்.. ஆன்லைன் புக்கிங் தொடக்கம்!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை தபால் மூலம் பெறும் ஆன்லைன் புக்கிங் தொடங்கியுள்ளது.

5. கரோனா பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னிலை

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6. கரோனா பரவலாக மாறிய ட்ரம்பின் தேர்தல் நைட் பார்ட்டி!

வாஷிங்டன்: அதிபர் ட்ரம்ப் தேர்தல் பரப்புரைகள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற பார்ட்டியானது கரோனா தொற்று பரவல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. அம்மா உணவகம் எதிரே 120 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்!

பொள்ளாச்சி: அம்மா உணவகம் எதிரே கேட்பாரற்று நின்ற வாகனத்தில் 120 கிலோ எடை அளவுள்ள போதைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

8. நாளை திரையரங்குகள் திறப்பு: கூடுதல் காவலர்கள் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி: திரையரங்குகள் திறக்கப்படுவதையொட்டி கரோனா விதிமுறைகளை கண்காணிக்க கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

9. பீல்டிங்கில் கோட்டைவிட்டால் கோப்பையை வெல்ல முடியாது - வார்னர்

நடராஜன், ரஷீத் கான், மனீஷ் பாண்டே ஆகியோர் இந்தத் தொடரில் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கேட்ச்சுகளையும், கிடைக்கும் வாய்ப்புகளையும் தவறவிட்டால், நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது. அந்த வகையில் பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் கண்டாலும் பீல்டிங்கில் மோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாக டேவிட் வார்னர் கூறினார்.

10.முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை
சென்னை: ரூ. 2.70 கோடி மோசடி புகாரை தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details