தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 19, 2021, 7:18 PM IST

1. மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்

குரங்கு பி வைரஸ் தாக்கி சீனாவில் முதன்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2.தொடங்குகிறது தமிழ்நாட்டின் ஐபிஎல்: முதல் போட்டியில் கோவை - சேலம் மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) ஐந்தாவது சீசன் இன்று (ஜூலை 19) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸும், டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸும் மோதுகின்றன.

3. 'ஒன்றிய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை' - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

பெகாஸஸ் செயலி மூலம் ஒன்றிய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என, நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

4. பெகாசஸ் செயலி மூலம் மோடி அரசு வேவு பார்க்கிறது - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களின் அலைபேசி, கணினித் தகவல்களை மோடி அரசு வேவு பார்த்துள்ளதாக திருமுருகன் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

5. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஸ்டாலின் உத்தரவாதம் வழங்க வேண்டும் - ஓபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியைப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

6. ’திரையில் அப்படி ஜொலிக்கிறார்...’ - விஜய் தேவரகொண்டாவை புகழ்ந்து தள்ளிய ’கல்ட்’ இயக்குநர்!

விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் அறிமுகமாகும் ’லிகர்’ படத்தின் சில காட்சிகளைக் கண்டுகளித்த பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, விஜய் தேவரகொண்டாவை அலாதியாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

7.தர்பார் திருவிழா: ரஜினிஃபைட் ஜப்பான் ரசிகர்கள்!

ஜப்பானில் ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

8. தடுப்பூசிக்குப் பயந்த சினேகா... வீடியோ வெளியிட்ட கணவர்!

நடிகர் பிரசன்னா, தனது மனைவி சினேகா கரோனா தடுப்பூசி போடும்போது செய்த குறும்புத்தனமான செயலை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

9.'பொன்னியின் செல்வன்' முதல் பாகம்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட், தற்போது வெளியாகியுள்ளது.

10. ’டெல்டா வேரியண்ட்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் தடுப்பூசி’ - ஐசிஎம்ஆர் தகவல்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள், டெல்டா வேரியண்ட்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details