தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

9pm
9pm

By

Published : Apr 15, 2021, 9:08 PM IST

1.கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு!

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

2.பாஜகவினர் மீது தாக்குதல்... விசிக மீது நடவடிக்கை வேண்டும்: எல். முருகன்

சென்னை: மதுரையில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய விசிக மீது, உடனடியாக காவல் துறை நடவடிக்கை வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் இன்று (ஏப். 15) தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

3. ‘அண்ணா, காமராஜர், பெரியார் பெயர்களை மறைக்க சதி நடக்கிறது’- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் அண்ணா, காமராஜர், பெரியார் ஆகியோர்களின் பெயர்களை மறைக்க திட்டமிட்டு சதி நடப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டினார்.

4.அதிமுக வெற்றிபெற தங்கத்தேர் இழுத்து அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுதல்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு சென்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்

5.கேரளத்தில் இரு தினங்களில் 2.5 லட்சம் கோவிட் பரிசோதனை நடத்த திட்டம்!

கேரளத்தில் இரு தினங்களில் 2.5 லட்சம் கோவிட் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

6.டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு!

டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

7.கும்பமேளாவில் காற்றில் பறக்கவிடப்பட்ட கரோனா விதிமுறைகள்!

டெல்லி: உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் நகரில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.

8.விபத்தில் சிக்கி கரிக்கட்டையான இருவர்- தெலங்கானாவில் கோர விபத்து!

தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

9.’'அந்நியன்' என் உரிமை...என் படைப்பு’ - பதிலடி கொடுத்த ஷங்கர்

'அந்நியன்' இந்தி ரீமேக் தொடர்பான ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கடித்துக்கு இயக்குநர் ஷங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

10.IPL 2021 RR vs DC: வெற்றியைத் தீர்மானிக்கும் டாஸை வென்ற சாம்சன்; ராஜஸ்தான் பந்துவீச்சு!
ராஜஸ்தான் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ABOUT THE AUTHOR

...view details