தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9PM
9PM

By

Published : Nov 18, 2020, 9:11 PM IST

1. "கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிக்கிறது" - ஃபைஸர் நிறுவனம்

நியூயார்க்: ஃபைஸர் நிறுவனம் தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாகவும், அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

2. மருத்துவமனையில் சிகிச்சை பெற வரவர ராவுக்கு அனுமதி!

மும்பை: பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், நானவதி மருத்துவமனையில் 15 நாள்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

3. நேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க மம்தா கோரிக்கை!

கொல்கத்தா: சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

4. பெங்களூரு கலவரம்: 43 இடங்களில் என்ஐஏ சோதனை!

பெங்களூரு கவலரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் என்ஐஏ அலுவலர்கள், இன்று 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

5. ஜம்மு-காஷ்மீரில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட 35 மூத்த அலுவலர்கள் பணியிடை நீக்கம்!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூத்த அலுவலர்கள் 35 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறையின் உயர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

6. மத்திய அரசை கண்டித்து கொடுங்கோன்மை சட்டங்களுக்கு எதிரான இயக்கம் போராட்டம்

சென்னை: ஊபா சட்டம், தேசிய புலனாய்வு முகமையின் சட்டத்தை கண்டித்து, கொடுங்கோன்மை சட்டங்களுக்கு எதிரான இயக்கம் பரப்புரை போராட்டம் நடத்தியது.

7.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சாதனை!

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தகுதி பெற்று ஒரு துறையில் இருந்து வேறு துறைகளுக்கு மாறுவதற்கு அனுமதி கேட்ட 222 அரசு அலுவலர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

8.'திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்களுக்கு சிக்கல்கள் இல்லை'

சென்னை: அடுத்தாண்டு மார்ச் மாதம் இறுதி வரை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

9. ஜஸ்டின் லாங்கருக்கு உதவிய டான் பிராட்மேன்...!

மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிதவேக பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் ஜஸ்டின் லாங்கருக்கு, ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் கடிதம் வாயிலாக உதவியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

10. ஏடிபி ஃபைனல்ஸ்: டாமினிக் தீமிடம் வீழ்ந்த நடால்...!

ஏடிபி ஃபைன்ல்ஸ் தொடரில் குரூப் சுற்றுப்போட்டியில் டாமினிக் தீமிடம் 7-6 (7), 7-6(4) என்ற செட் கணக்கில் நட்சத்திர வீரர் நடால் தோல்வியடைந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details