தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் மாலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Etv Bharath
Etv Bharath

By

Published : Apr 3, 2021, 10:17 PM IST

1. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பரப்புரை!

தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சென்று என்னைப் பற்றி தெரியாது என்று பேசி, தற்போது அனைவருக்கும் தெரிய வைத்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் இன்று (ஏப். 3) வி.கே. சசிகலா சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.

3.சக வேட்பாளர்களுக்கு கமல் ஹாசன் கடிதம்!

சென்னை: கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ வேண்டும் என சக வேட்பாளர்களுக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

4. 'வாங்க வாங்க ஏரியாவுக்கு வாங்க...': மம்தாவின் சவாலை ஏற்ற மோடி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா, பிரதமர் மோடி ஆகியோருக்கிடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

5. 'ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்' - திருமாவளவன் பேச்சு

பெரம்பலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.

6. வான்கடே மைதானத்தின் 10 ஊழியர்களுக்குக் கரோனா தொற்று

ஊழியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும், சென்னை - டெல்லி அணிகளுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என மூத்த பிசிசிஐ அலுவலர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

7. சட்டப்பேரவைத் தேர்தல்: சொந்தவூரில் வாக்களிக்க 2 லட்சம் பேர் பயணம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்குப் பதிவு செய்ய சுமார் 2 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

8. நடிகை நிவேதா தாமஸுக்குக் கரோனா!

சென்னை: நடிகை நிவேதா தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9.சச்சின் வாஸேவின் என்ஐஏ விசாரணை நீட்டிப்பு

மும்பை: முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்த வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல் துறை அலுவலரான சச்சின் வாஸேவின் என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10.'கருத்துக்கணிப்பை நம்பவில்லை' - நடிகை நமீதா

உதகை: தேர்தல் கருத்துக் கணிப்பு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details