தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 9 மணி செய்தி
காலை 9 மணி செய்தி

By

Published : Aug 18, 2021, 9:06 AM IST

1.'திருநங்கை விருது பெற்றதை அரசியல் தலைவர்கள் வரவேற்கவில்லை' - கிரேஸ் பானு வேதனை!

திருநங்கைகளுக்கு என்று ஒரு தனி விருது வழங்கிய அரசாங்கத்தையோ, விருது வாங்கிய திருநங்கையையோ அரசியல் தலைவர்கள் பாராட்டாதது வருத்தத்தை அளிப்பதாக திருநங்கை கிரேஸ் பானு வேதனை தெரிவித்துள்ளார்.

2. 3ஆவது அலை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் - மா. சுப்பிரமணியன்

மூன்றாவது அலை வந்தாலும் அதனைச் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3.காலணி தைப்பவரின் மகனான என்னை அமைச்சராக்கியது மோடிதான் - எல். முருகன் உருக்கம்

பட்டியலினத்தைச் சேர்ந்த என்னை மத்திய இணை அமைச்சராக்கியது பிரதமர் நரேந்திர மோடிதான் என எல். முருகன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

4. மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

5. கோடநாடு கொலை வழக்கு: விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியதாகத் தகவல்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நிபந்தனை பிணையில் உள்ள சயானிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அந்தச் சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக சயான் விசாரணை அலுவலர்களிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

6. பெண் அடிமைத்தன அடையாளத்தை உடைக்க முயல்கிறதா தாலிபன்?

தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிற சூழலில், தாலிபன்கள் பெண் அடிமைத்தன அடையாளத்தை உடைக்க முயல்வதாகக் கூறுகிறார் அரூனிம் புயான்.

7. 3.20 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு அலுவலர் கைது!

கரோனா உபகரணங்களை குறைந்த விலையில் பெற்று தருவதாகக் கூறி 3.20 கோடி ரூபாய் மோசடி செய்த ஒன்றிய அரசு அலுவலரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

8. புனேயில் நரேந்திர மோடிக்கு கோயில்!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நரேந்திர மோடிக்கு மயூர் முண்டே என்பவர் கோயில் எழுப்பியுள்ளார்.

9. போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பி வரி ஏய்ப்பு செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

10. மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார் - தாயார் சரோஜா நம்பிக்கை

பாரா ஒலிம்பிக்கில் இந்த முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று பிரதமர் மோடி உடனான கலந்துரையாடலுக்குப் பின், அவரது தாயார் சரோஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details