தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9AM - top 10 tamil news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்..

9AM
9AM

By

Published : Aug 15, 2021, 9:07 AM IST

1. காந்தியின் நினைவுகளை உலகறியச் செய்து வரும் மங்கம்மாள் மாளிகை!

இந்திய சுதந்திர வரலாற்றில் மாபெரும் சகாப்தம் மகாத்மா காந்தி என்றால், அவரது வாழ்க்கையின் முக்கியமான சகாப்தமாக இன்றுவரை இருந்து வருகிறது மதுரை.

2. சுதந்திர, குடியரசு தினங்களன்று கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியானது, சுதந்திர, குடியரசு ஆகிய இரு வேறு தினங்களில் ஏற்றப்படுவதில் உள்ள வித்தியாசஙளைக் காண்போம்.

3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்!

தமிழ்நாட்டின் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சங்கத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

4. தமிழ்நாடு எம்.பி.,க்கள் இங்கு மட்டும்தான் புலி - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு!

தமிழ்நாடு எம்.பி.,க்கள் மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. அவர்கள் இங்கு மட்டும்தான் புலி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

5. ஈரோட்டில் காங்கிரஸ் கமிட்டியின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் கட்சியின் மாநில துணைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

6. சாத்தூர் - தூத்துக்குடிவரை இரட்டை ரயில் பாதை பணி - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சாத்தூர் - தூத்துக்குடிவரை நடைபெற்றுவரும் இரட்டை ரயில் பாதை பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார்.

7. கர்நாடகா ஜாலியன் வாலாபாக்!

நாட்டின் 75ஆவது சுதந்திர தினமான இன்று, கர்நாடகா ஜாலியன் வாலாபாக் நிகழ்வான விதுராஸ்வதா துப்பாக்கிச் சூடு மற்றும் கர்நாடகா கொடி சத்தியாகிரகம் குறித்து பார்க்கலாம்.

8. ஃபுட் டெலிவரியில் களமிறக்கப்படும் ட்ரோன்கள்

லக்னோவை சேர்ந்த மாணவர்கள் சிலர், குறைவில் செலவில் ட்ரோன்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.

9. காவலரைக் காரால் இடித்து இழுத்து சென்ற கொடூரம்: வைரல் வீடியோ

ஓட்டுநர் ஒருவர், காவலர் மீது காரை ஏற்றி இழுத்து சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

10.சியான் 60 படப்பிடிப்பு நிறைவு- கேக்குடன் கொண்டாடிய படக்குழு

நடிகர் விக்ரம் நடித்துவந்த 'சியான் 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details