தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - ETV BHARAT

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

காலை 9 மணி செய்தி சுருக்கம்
காலை 9 மணி செய்தி சுருக்கம்

By

Published : Nov 1, 2021, 9:12 AM IST

1. பள்ளிகளுக்கு விடுமுறை: மகிழ்ச்சியில் மாணவர்கள்

கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2. வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவ. 1) தீர்ப்பளிக்க உள்ளது.

3. இன்று பள்ளிகள் திறப்பு - 600 நாள்கள் கழித்து பள்ளி செல்லும் மாணவர்கள்

நீண்ட நாள்கள் கழித்து இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்களை வரவேற்கச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

5. சசிகலா குறித்த கேள்விக்கு செய்தியாளர்களை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி

கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, அவரது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவருக்கு அதிமுக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இந்நிகழ்ச்சி முடிந்து சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளிக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றார்.

6. கரோனாவிற்கு எதிராக 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் புதிய மருந்து!

அஸ்ட்ராஜெனெகாவின் புதிய ஆன்டிபாடி மருந்து கரோனாவிற்கு எதிராக 18 மாதங்கள் வரை பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

7. 'அண்ணாத்த' ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

தீபாவளியையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 'அண்ணாத்த' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது.

8. கரைபுரளும் அழகு வெள்ளத்தில் மின்னும் பொன் சிலை ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங்கின் கண் கவரும் புகைப்படத் தொகுப்பு!

9. T20 WORLDCUP: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா ஏறத்தாழ இழந்துள்ளது.

10. அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரையிலான வார ராசி பலன்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசி பலன்களைக் காண்போம்.

ABOUT THE AUTHOR

...view details