தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் காலை 9 சுருக்கத்தை பார்க்கலாம்.

9 மணி செய்தி
9 மணி செய்தி

By

Published : May 9, 2021, 9:15 AM IST

1.கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்!

மருத்துவமனை, நர்சிங் ஹோம், கரோனா சிகிச்சை மையங்களில், சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம், அதற்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2.கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன்: நடிகர் அஜித்தின் தக்க்ஷா குழு கண்டுபிடிப்பு!

திருநெல்வேலி: நடிகர் அஜித் ஆலோசகராக உள்ள தக்க்ஷா குழுவினர் தயாரித்த புதிய ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

3. பேருந்துகளில் இலவச பயணம்: கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சி!

ஈரோடு: நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் பகுதியில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்த கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும் மகிழ்சியடைந்தனர்.

4.ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்!

ஈரோடு: தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

5.வளிமண்டல சுழற்சி காரணமாக சில மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக ிமழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

6. ஆவின் பால் விலைக் குறைப்பு பட்டியல் வெளியீடு: மே 16 முதல் அமல்

சென்னை: ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியிருப்பதாக ஊடங்களில் வரும் செய்தி தவறானது என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் ஆ.பொன்னுசாமி குற்றஞ்சாடியுள்ளார்.

7.புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா: பொதுமக்கள் அச்சம்!

புதுச்சேரி: மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,703 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

8.சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய இருவர் கைது

தூத்துக்குடி: இருவேறு ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடிய இரண்டு பேரை காவல் துறை கைது செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது.

9.'முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!' - முதலமைச்சர் வேண்டுகோள்!

சென்னை: முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்ரம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினை, நடிகர் விக்ரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details