தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 tamil news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7PM
7PM

By

Published : Jul 22, 2021, 7:02 PM IST

1. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ரெய்டு - ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திமுக அரசு வருமான வரி சோதனையை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2. சிவசங்கர் பாபா நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவலை, ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

3. பெகாசஸ்: 'ஊடகங்கள் வாய் திறக்க அஞ்சுகின்றன' - கே.எஸ்.அழகிரி

நாட்டில் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து ஊடகங்கள் பேச வேண்டும். அதிகாரத்துக்கு பயந்து பல சிந்தனைவாதிகள், ஊடகங்களில் வாய் திறக்க அஞ்சுகின்றனர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

4. அதிமுக ஆட்சியால் ரூ‌.400 கோடி கடன் - அமைச்சர் மனோ தங்கராஜ்

அதிமுக ஆட்சியால் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூ.400 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

5. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் 11% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல், ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்கள் 11% படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

6. அமைச்சரின் அறிக்கையை கிழித்து எறிந்த திருணாமுல் எம்.பி., - நாடாளுமன்றத்தில் கடும் அமளி!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், திருணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. டைனிக் பாஸ்கர் பத்திரிகை குழுமங்களில் வருமான வரி சோதனை!

டைனிக் பாஸ்கர் உள்ளிட்ட பத்திரிகை குழுமங்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

8. இந்தோனேசியாவில் 18 படகுகளைப் பந்தாடிய புயல்... 24 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் புயல் காரணமாக 18 படகுகள் விபத்துக்குள்ளானதில், தற்போது வரை 24 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

9. மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தொகுப்பாளி அர்ச்சனா வீடு திரும்பினார். அதன்பின் அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10. வெளியான 'சூர்யா 40' டைட்டில்: ரசிகர்கள் மகிழ்ச்சி

பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'சூர்யா 40' படத்திற்கு 'எதற்கும் துணிந்தவன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details