தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7PM
7PM

By

Published : Jul 21, 2021, 7:15 PM IST

1. 'காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு... தடை கோரும் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை தேவை'

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல்செய்துள்ள வழக்குகளைத் தள்ளுபடிசெய்ய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

2. 'நளினி, முருகன், சாந்தன் முன்விடுதலை கோரி மனு'

நளினி, முருகன், சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளுமே முன்விடுதலை கோரி மனு அளித்துள்ளதாக வேலூர் மத்திய சிறையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

3.சென்னை வந்தடைந்த 6.98 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி

புனேவிலிருந்து விமானம் மூலம் ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை வந்தடைந்தன.

4. கண்கவரும் கொடைக்கான‌ல் ப‌சுமைப் ப‌ள்ள‌த்தாக்கு - அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

கொடைக்கான‌லில் சுமார் 5000 அடி உய‌ர‌மாக‌ இருக்க‌க் கூடிய‌ ப‌சுமைப் ப‌ள்ள‌த்தாக்கு என‌ப்ப‌டும் த‌ற்கொலைப் பாறை, ப‌சுமை நிறைந்த‌ ம‌ர‌ங்க‌ள், செடி, கொடிக‌ள் எழில் கொஞ்சும் காட்சிக‌ள் காண்போரைப் பர‌வ‌ச‌ப்ப‌டுத்திவ‌ருகிற‌து.

5. 'யாரிடமும் பேச முடியவில்லை' - மம்தாவை கடுப்பேற்றிய பெகாசஸ்

நாட்டின் கூட்டாட்சித் தன்மையைத் தகர்க்கும்விதமாக பாஜக செயல்பட்டுவருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

6. இறக்கும் தருவாயில் இருக்கும் கணவரின் விந்தணுக்களைக் கேட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நபரின் விந்து மாதிரிகளைச் சேகரிக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. சினிமாவுக்கு குட்பை: முழு நேர அரசியல்வாதி ஆகிறார் உதய்?

சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

8. சிம்பு - கெளதம் மேனன் பட அப்டேட்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

9.சினிமா வாய்ப்பு: இளம்பெண் பாலியல் வன்புணர்வு?

சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக இளம்பெண் கொடுத்த புகாரை ஜூலை 24ஆம் தேதி அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

10. சாம்பியன்களைப் போல செயல்பட்டோம்: ராகுல் டிராவிட்

இலங்கை அணி அற்புதமாக விளையாடினாலும், நாம் சாம்பியன்கள் போன்று செயல்பட்டு அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளோம் என நேற்றைய (ஜூலை 20) வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details