தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7PM
7PM

By

Published : Nov 13, 2020, 7:02 PM IST

1. தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. எல்லையில் தாக்குதல்: 3 இந்தியர்கள், 8 பாகிஸ்தானிகள் பலி

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

3. அருந்ததிராய் கட்டுரை நீக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தர் விளக்கம்

வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றப்படுவது வழக்கம் என்றும் அந்த வகையில்தான் 2017ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட அருந்ததி ராய் கட்டுரை நீக்கப்பட்டு புதிய கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் பிச்சுமணி விளக்கம் அளித்துள்ளார்.

4. தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் மூன்று ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

5. சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவு தினம் - நாடக கலைஞர்கள் அஞ்சலி

புதுச்சேரி: நாடக தந்தை என போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவு தினம் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.

6. ஆம்புலன்ஸில் 17 நிமிடங்களில் 18.3 கி.மீ பறந்த இதயம்

டெல்லி: மூளைச் சாவடைந்த சிறுவனின் இதயத்தை, கிரீன் காரிடார் முறை மூலம் 17 நிமிடத்தில் 18.3 கி.மீட்டரைக் கடந்து டெல்லி காவல் துறையினர் சாதனை படைத்துள்ளனர்.

7. யமுனா நதியில் நச்சு நுரை மிதந்த விவகாரம் : 2 ஆலைகளுக்கு சீல்

டெல்லி : யமுனா நதியின் மேற்பரப்பில் நச்சு நுரை மிதந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இரண்டு தனியார் ஆலைகளுக்கு சீல் வைத்தும், 15 நிறுவனங்களை மூடியும் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது.

8. சிபிராஜின் 'கபடதாரி' டீசரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'கபடதாரி' படத்தின் டீசரை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

9. வெற்றிமாறன் வெளியிடும் 'காவல்துறை உங்கள் நண்பன்'

சென்னை: 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் வெளீட்டில் தனஞ்ஜெயனுடன் வெற்றிமாறனும் கைக்கோத்துள்ளார்.

10. பாரம்பரியத்திலிருந்து விலகும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், பாரம்பரியத்திலிருந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விலகுவதாக கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details