தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்தி
7 மணி செய்தி

By

Published : Nov 11, 2020, 6:56 PM IST

1.“நிதிஷ் குமார் முதலமைச்சராக தொடர்வார்”- ஜிதன் ராம் மஞ்சி

பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் தொடர்வார் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்துஸ்தானி அவாம் மோர்சா (ஹெச்ஏஎம்-HAM) கட்சியின் நிறுவனத் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.

2. நோட்டாவை நோக்கிச் செல்லும் பிகார் மக்கள்!

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏழு லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3. பிரதமர் மோடி தலைமையில் ஆசியான் மாநாடு!

டெல்லி: 10ஆவது ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொள்ள உள்ளார்.

4. லடாக்கின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசின் உதவியைக் கோரியுள்ள ஆளுநர்!

லே : லடாக் யூனியன் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் புகழ்பெற்ற பாஷ்மினா (கம்பளி) மூலம் அங்கு தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்த உதவ வேண்டுமென துணை நிலை ஆளுநர் ஆர்.கே மாத்தூர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. கிளப்பில் சூதாட்டம்: 13 பேர் கைது, 11 செல்போன்கள், ரூ.42,000 பறிமுதல்!

சென்னை: கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சினிமா போட்டோகிராஃபர் உள்பட 13 நபர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் 42ஆயிரம் ரூபாய், 11 செல்போன்களைப் பறிமுதல்செய்தனர்.

6. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - டிச. 10ஆம் தேதி மீண்டும் விசாரணை!

மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலை வழக்கு, வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. தொழிலதிபர் ராஜ் குமார் குப்தா வீட்டில் சோதனை!

ஜம்மு காஷ்மீரில் தொழிலதிபர் ராஜ் குமார் குப்தா -வுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

8. ”ரோஹித் கேப்டனாக்கப்படவில்லை என்றால், நமக்கு தான் இழப்பு” - கவுதம் கம்பீர் காட்டம்!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படவில்லை என்றால், அது நமக்குத் தான் இழப்பே ஒழிய அவருக்கு ஒன்றும் இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

9. கரோனாவால் உயிரிழந்த சல்மான்கான் பட நடிகர்!

சிம்லா: கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஹரிஷ் பச்சாட்டா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

10. 'இரண்டாம் குத்து' டீசரை சமூக வலைதளத்திலிருந்து நீக்க உத்தரவு

மதுரை: 'இரண்டாம் குத்து' பட டீசரை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details