தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news 7 Am
Top 10 news 7 Am

By

Published : Oct 13, 2021, 7:08 AM IST

1. 90 வயதில் ஊராட்சித் தலைவரானார் மூதாட்டி: எதிர்த்துப் போட்டியிட்ட இருவரும் டெபாசிட் இழப்பு!

திருநெல்வேலியில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 90 வயதான மூதாட்டி வெற்றிபெற்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் மூதாட்டியைத் தோளில் சுமந்து ஊஞ்சலாட்டி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

2. அக்டோபர் 13 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

3. உத்ரா கொலை வழக்கு: இன்று தீர்ப்பு

கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த வழக்கில் அந்தப் பாம்பு ஏழு நாள்கள் பட்டினியாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

4. நல்ல நேரம் யாருக்கு? - அக்டோபர் 13

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

5. உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி முன்னிலை!

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 93 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும், 349 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

6. 'பேட்டரி வாகன பராமரிப்பு டெண்டரில் ஊழல்!'

சென்னை மாநகராட்சியின் பேட்டரி வாகன பராமரிப்பு டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

7. எச்சரிக்கை மக்களே! ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டுநோய்களுக்கு முக்கிய காரணமாம்!

இன்று உலக மூட்டுநோய் தினம். 2021 ( World Arthritis Day 2021) ஆரோக்கியமற்ற உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் மூட்டுநோய்க்கு முக்கிய காரணமாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

8. பில்லூர் அணை திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதகுகளிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

9. கோயில்களில் அனுமதி மறுக்கப்படுவதேன்? - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை ஸ்ரீ மாரியம்மன் சப்பரம் வீதி உலா சென்றுவர அனுமதி வழங்கக் கோரிய வழக்கில் வருகிற 14ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் உரிய முடிவு எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

10. 'உணருங்க யூனியன் வங்கி...' - நிர்வாணமே நிரந்தரம்!

'பிரச்னை இங்கு உடையல்ல, உடையைக் காரணியாக வைத்து மதம், சாதி, அதிகாரத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையும், வன்முறைகளுமே'

ABOUT THE AUTHOR

...view details