தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

5 PM
5 PM

By

Published : Apr 15, 2021, 5:16 PM IST

1.’ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞரின் பங்களிப்பு காலத்தால் அழியாதது’ - கர்ணன் பட சர்ச்சை குறித்து உதயநிதி

”ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம்- உதயநிதி ஸ்டாலின்.

2.புதிய கட்டடத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட இடைக்கால தடை!

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா? என்பது தெரியும்வரை புதிய கட்டடத்தில் காவல் நிலையம் செயல்பட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.இந்தியன் 2 விவகாரம்: லைகா நிறுவனத்துக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி!
இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

4.மே மாதம் முதல் ஆன்லைனில் அரியர் தேர்வுகள்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள், ஆன்லைன் மூலம் மே மாதம் முதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

5.தமிழ்நாட்டில் மேலும் கட்டுப்பாடுகள்? தலைமை செயலர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை (ஏப்ரல்.16) ஆலோசனை நடைபெறுகிறது.

6.பராமரிப்பின்றி கிடக்கும் பாரதிதாசன் சிலை: ஆளுநர் தமிழிசை ஆய்வு

புதுச்சேரி: பாரதி பூங்காவில் பராமரிப்பின்றி கிடக்கும் பாரதிதாசன் சிலையை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.

7.பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள்!

புதுச்சேரி: பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு புதுச்சேரி அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

8.முதியவர்களைக் குறிவைத்து முன்னாள் வங்கி ஊழியர் மோசடி: சிக்கியது எப்படி?

சென்னை: அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி முதியவர்களைக் குறிவைத்து ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

9.அறிகுறி இல்லாமலேயே கரோனா தொற்று உறுதி - டொவினோ தாமஸ்

மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10.வேகமாக பரவும் கரோனா, தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு - நடிகர் விவேக்

சென்னை: கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி மட்டுமே மருத்துவ ரீதியான ஒரே பாதுகாப்பு என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details