தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 28, 2021, 5:29 PM IST

1. பிராஜக்ட் சூப்பர் ஸ்டார்... ரஜினிக்கு நன்றி தெரிவித்து 100 மில்லியன் டாலர்கள் பங்கு வெளியிடும் தனியார் நிறுவனம்!

சென்னை: ’பிராஜக்ட் சூப்பர் ஸ்டார்’ எனும் பெயரில் ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் 100 மில்லியன் டாலர்கள் (சுமார் 700 கோடி ரூபாய்) பங்கு மூலதனத்தை வெளியிட உள்ளது.

2. பாஜக வருமானம் 50% அதிகரிப்பு, உங்கள் வருவாய்? ராகுல் காந்தி

பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 50 விழுக்காடு வரை ஏற்றம் கண்டுள்ளது, உங்கள் நிலை என்ன என்று நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

3. மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி பத்திரிகையாளர்களை களைய ஏதுவாக, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. 'வாழ்க்கையில் பல பிரச்சினைகளை பார்த்துள்ளேன்' - நடிகை வனிதா

வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

5. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு.. மிதக்கும் அஸ்ஸாம்.. 1.33 லட்சம் மக்கள் பாதிப்பு!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் வெள்ளத்தில் மிதக்கிறது. 243 கிராமங்களைச் சேர்ந்த 1.33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6. மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' - நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி

மீண்டும் சினிமாவில் தோன்றப் போவது முதன் முதலில் தான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

7. என்னை ஊனமுற்றவராக நான் உணர்ந்ததே இல்லை - பவினாபென் படேல்

என்னை ஒருபோதும் ஊனமுற்றவர் என்று நினைத்து இல்லை, என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு என்று பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நோக்கி முன்னேறியுள்ள பவினாபென் படேல் தெரிவித்துள்ளார்.

8. கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் - அமைச்சர் தகவல்

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், ரூ. 50 கோடி செலவில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும் என, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

9. மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை அதிகரிக்க நடவடிக்கை

பால்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், ”113.75 கோடி ரூபாய் மூலம் மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details