தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Nov 27, 2021, 5:40 PM IST

1. புதிய வகை கரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2. ஓடும் லாரியில் முட்டை திருட்டு - இளைஞரின் வைரல் வீடியோ

கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு முட்டை ஏற்றி சென்ற டெம்போவின் பின்புறம் ஏறிய இளைஞர், முட்டைகளை திருடும் வீடியோ வைரலாகி வருகிறது.

3. கழிவு நீர் கலந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஏரிக்கு மழைக்காலத்தில் ஊத்துமலையிலிருந்து மழை நீர் ஓடை வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில் ஏரிக்கு வரக்கூடிய ஓடையில் அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் ஆலைக் கழிவுகளை லாரி மூலம் கொண்டு வந்து ஓடையில் கலப்பதாக புகார் எழுந்தது. கழிவுநீர் கலக்க வந்த லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்‌.

4. நெல்லையில் தொடர் மழை; பொதுமக்கள் அவதி

நெல்லையில் தொடர் மழை காரணமாக டவன் பகுதியில் வீடுகளை சூழ்ந்த நீர் இரண்டாவது நாளாக வடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

5. கோவை: ரயில்மோதி உயிரிழந்த யானை கருவுற்றிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிப்பு

கோயம்புத்தூரில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளில் ஒன்று கருவுற்று இருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6. Chennai Rain: சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகம்- சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

7. தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.36,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8. கரூரில் ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்’ திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்

கரூர் மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்' என்ற திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.

9. தர்மபுரியில் கால பைரவர் ஜெயந்தி

தர்மபுரி அதியமான் கோட்டையில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. காசிக்கு அடுத்ததாக கால பைரவருக்கு தனி ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இங்கு கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலையில் பால், தயிர், சந்தனம் தேன் உள்ளிட்டவை கொண்டு கால பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

10. விவசாயி.. விவசாயி... மழை வெள்ள பாதிப்புகளை டிராக்டரில் வந்து பார்வையிட்ட பாஜக எம்எல்ஏ!

நெல்லையில் மழை வெள்ள பாதிப்புகளை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டிராக்டரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details